Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்வு

By: Monisha Thu, 28 May 2020 11:13:28 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

india,coronavirus,casualty figures,death toll,central health ministry ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு எண்ணிக்கை,பலி எண்ணிக்கை,மத்திய சுகாதாரத்துறை

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67692 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 56948 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|