Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைவானில் 253 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல்

தைவானில் 253 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல்

By: Karunakaran Thu, 24 Dec 2020 08:13:23 AM

தைவானில் 253 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல்

தென்சீன கடல்பரப்பில் தீவுக்கூட்டங்களுடன் அமைந்துள்ள நாடு தைவான். கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நாட்டில் வைரஸ் தொற்றை வெகுவாக குறைத்து உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அந்நாட்டில் மொத்தமாக இதுவரை 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதிக்கு பின்னர் அந்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், வைரஸ் பாதிப்பு குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதன்படி, தைவான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் கடந்த 12-ம் தேதி அமெரிக்காவில் இருந்து தைவான் வந்தது. அந்த விமானத்தில் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த 2 பேர் விமானிகளாக பணியாற்றிவந்தனர். இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் விமான பயணத்தின்போது முகக்கவசம் உள்பட எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை. இதனால், அவருக்கு சளி, இருமல் என கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

coronavirus,253 days,taiwan,airline ,கொரோனா வைரஸ், 253 நாட்கள், தைவான், விமான நிறுவனம்

தைவான் வந்தடைந்த பின்னரும் நியூசிலாந்து விமானி தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் தகவலை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து, தைவானின் பல்வேறு சந்தைபகுதிகளுக்கும் சென்றுள்ளார். இந்நிலையில், தைவானில் உள்நாட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் நேற்றுமுன் தினம் உறுதி செய்தனர். அந்த பெண்மணிக்கு எப்படி கொரோனா பரவியது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்த பெண் தைவான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானியை சமீபத்தில் சந்தித்தது தெரியவந்தது. மேலும், அவருடன் பணியாற்றிவந்த சக ஊழியரான ஜப்பான் விமானிக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

இதனால், உண்மையை மறைத்த குற்றத்திற்காக அந்த விமானிக்கு 10 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நியூசிலாந்து விமானியை தைவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. 253 நாட்களுக்கு பின்னர் உள்ளூர் நபரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பரவ காரணமாக கூறப்படும் நியூசிலாந்து விமானியும், அவரால் பாதிக்கப்பட்ட ஜப்பான் விமானியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags :
|