Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரிப்பு

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரிப்பு

By: Karunakaran Wed, 01 July 2020 12:27:59 PM

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அரபு நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அங்கு அரசு எடுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 வாரங்களாக அங்கு கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

saudi arabia,coronavirus,corona death,corona prevalence ,சவுதி அரேபியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

ஆனால் தற்போது மீண்டும் சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4000 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் 48 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,599 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :