Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹோன்டுராஸ் நாட்டு அதிபர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று

ஹோன்டுராஸ் நாட்டு அதிபர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Thu, 18 June 2020 08:52:46 AM

ஹோன்டுராஸ் நாட்டு அதிபர் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோன்டுராஸ் அதிபர் ஜூவன் ஆர்லான்டோ ஹெர்நான்டேசுக்கு (JUAN ORLANDO HERNANDEZ) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தியபோது, இந்த தகவலை அவர் வெளியிட்டார். இதேபோல் தனது மனைவி அனா, 2 உதவியாளர்கள் ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜூவன் ஆர்லான்டோ கூறியுள்ளார். கொரோனா உறுதியாகியிருப்பதால், தனிமையில் இருந்த நிலையில் அதிபருக்கான பணியை தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

chancellor,coroner impact,beijing,schools closure,flights canceled ,அதிபர், கொரோனா பாதிப்பு, பெய்ஜிங், பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து

சீனாவில் மீண்டும் கொரானா: மீண்டும் கொரோனா பரவியதால் பள்ளிகளை மூடியும், 1255 விமானங்களை ரத்து செய்தும் சீனா அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் சீனா மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பள்ளிகளை மூடியும், ஆயிரத்து 255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் கொரோனா பரவிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது இரண்டாவது அலையாகத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி பெய்ஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :