Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

By: vaithegi Thu, 04 Aug 2022 09:29:48 AM

163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

சென்னை: 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியலை அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டதட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதை அடுத்து இவர்களில் கட்டணம் செலுத்தி, முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அதன்படி 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர், இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்களாக கருதி, அவர்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

government college of arts and science,discussion ,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கலந்தாய்வு

இதனை தொடர்ந்து இந்த மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களை எந்தெந்த தேதியில் கலந்துகொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தபோது சமர்ப்பித்திருந்த செல்போன் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பிவருகின்றனர். எனவே அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன.இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும்போது என்னென்ன ஆவணங்கள் எடுத்துவரவேண்டும் என்பது ஆகிய விவரங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சில கல்லூரிகள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கின்றன.

அதன்படி, சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், ஆதார் கார்டு, சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால் அதற்கான சான்றிதழ், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்" எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :