Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிந்த காதலர்கள் புரிந்து கொள்ள கவுன்சிலிங்... இதற்கு ரூ.33 கோடி செலவும் செய்த நியூசிலாந்து

பிரிந்த காதலர்கள் புரிந்து கொள்ள கவுன்சிலிங்... இதற்கு ரூ.33 கோடி செலவும் செய்த நியூசிலாந்து

By: Nagaraj Sat, 25 Mar 2023 11:26:29 PM

பிரிந்த காதலர்கள் புரிந்து கொள்ள கவுன்சிலிங்... இதற்கு ரூ.33 கோடி செலவும் செய்த நியூசிலாந்து

நியூசிலாந்து: காதலர்களுக்கு கவுன்சிலிங்... பிரிந்த காதலர்களுக்கு கவுன்சிலிங் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவிற்கு ரூ.33 கோடி செலவு செய்துள்ளதாகவும் நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

காதலிக்கும் இளைஞர்கள், யுவதிகள் காதல் தோல்வியால் மனவேதனை அடைவதும், இதனால் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

counseling,government,new zeland, ,கவுன்சிலிங், நியூசிலாந்து அரசு, ரூ.33 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில் காதலில் தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சார குழுவை நியூசிலாந்து அரசு தொடங்கியுள்ளது.

இதற்காக 33 கோடி ரூபாயை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது. காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டு வர அறிவுரை வழங்கி இளைஞர்களை மனம் திறந்து பேச வைப்பது இந்த பிரச்சாரக் குழுவின் பணி என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அரசின் இந்த முயற்சியை அந்நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர்

Tags :