Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

By: vaithegi Wed, 16 Aug 2023 11:00:51 AM

கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும்,

veterinary studies,discussion ,கால்நடை மருத்துவ படிப்பு,கலந்தாய்வு

சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் இக்கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.இதனை அடுத்து முதல்கட்டமாக சிறப்பு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.ஆளு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் நேரடியாகவும், மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Tags :