Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நர்சிங் படிப்பிற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும்

நர்சிங் படிப்பிற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும்

By: vaithegi Fri, 16 Sept 2022 4:23:07 PM

நர்சிங் படிப்பிற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும்

சென்னை : 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் சேரலாம்.ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கப்பட்ட மருத்துவப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் முன்னதாக ஆகஸ்ட் 12ம் தேதியோடு வரை மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் காரணமாக ஆகஸ்ட் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த நிலையில், இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் மீண்டும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதை முன்னிட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

medical studies,minister ma. subramanian ,மருத்துவ படிப்பு,அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் குறிப்பாக, சென்னை மற்றும் கோவையில் அதிகமாக கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதாக கூறினார். இதனால் மக்கள் பொது இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பின் அவர் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்படும் என கூறினார்.

Tags :