Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் மேற்கொள்ளும் எதிர்தாக்குதல்கள்: அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை

உக்ரைன் மேற்கொள்ளும் எதிர்தாக்குதல்கள்: அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை

By: Nagaraj Sun, 02 July 2023 11:30:56 PM

உக்ரைன் மேற்கொள்ளும் எதிர்தாக்குதல்கள்: அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை

வாஷிங்டன்: அதிக உயிரிழப்புகள் ஏற்படும்... ரஷியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க உக்ரைன் மேற்கொண்டு வரும் எதிர்த்தாக்குதலுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி மேக் மில்லி கூறியுள்ளார்.

இது குறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்கும் உக்ரைனின் நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட மெதுவாக நடப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதுவே போரின் இயல்பு.

casualty,counter attack,high,military commander,ukraine,us, ,அதிகம், அமெரிக்கா, உக்ரைன், உயிரிழப்பு, எதிர் தாக்குதல், ராணுவ தளபதி

எதிர்த்தாக்குதல் மெதுவாக இருந்தாலும், உக்ரைன் அந்த நடவடிக்கையில் நிலையான முன்னேற்றத்தைக் கண்டது. உக்ரைன் ராணுவம் சவாலான, கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் மிகவும் கவனமாக முன்னேறி வருகிறது.

நாட்டின் ராணுவம் நாளொன்றுக்கு 100 மீட்டர், 1000 மீட்டர் என்ற அளவில் முன்னேறி வருகிறது. இப்போது நடப்பது உண்மையான போர். உயிரிழப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அதை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

Tags :
|
|