Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2.90 லட்சத்தை கடந்தது

கொரோனாவால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2.90 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Wed, 13 May 2020 09:02:23 AM

கொரோனாவால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2.90 லட்சத்தை கடந்தது

2.90 லட்சத்தை கடந்தது பலியானோர் எண்ணிக்கை... உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

2.90 lakh people,corona kills,world size,worry ,2.90 லட்சம் பேர், கொரோனா பலி, உலக அளவு, கவலைக்கிடம்

தற்போதைய நிலவரப்படி, 43 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவியவர்களில் 24 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 46 ஆயிரத்து 585 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 67 ஆயிரத்து 130க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 90 ஆயிரத்து 597 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :