கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதிகள் முத்தமிட்டு போராட்டம்
By: Nagaraj Wed, 30 Dec 2020 8:44:48 PM
விதிமுறைகளுக்கு எதிர்ப்பு... கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்த்து ரஷியாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தம்பதிகள் முத்தமிட்டு தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வைரஸ் தொற்று பெரிதாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு, சமூக இடைவெளியை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்து அதிருப்தியையும் விரக்தியையும் தெரிவித்து வருகின்றனர். இதில் ரஷ்யாவை சேர்ந்த டன் கணக்கான தம்பதிகள் மெட்ரோ ரயில்களில் முத்தமிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி
வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறது.
பல தம்பதிகள் டிசம்பர் 24 அன்று ரஷ்ய நகரமான யெகாடெரின்பர்க்கில் உள்ள
யெகாடெரின்பர்க் மெட்ரோவில் முத்தமிட்டு அதன் காட்சிபடுத்தினர்.
மெட்ரோ
ரயிலில் ஒவ்வொரு நாளும் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இசை
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது. வெளியில் செல்வது, வருவது போன்றவற்றை தடை
செய்வது நியாயமற்றது. என கிஸஸ் குழு ஊடகங்களுக்கு தெரிவித்தது. நைட்
கிளப்புகள் பொது இடங்கள் ஆகியவற்றில் கூட்டம் கூடுவதை ரஷ்ய அரசு தடை
விதித்தது.
ரஷ்யா மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகள் தங்களது ஊரடங்கு அமல்
படுத்தி வருகிறது. இது போன்ற போராட்டங்களும் நடைபெற்று தான் வருகிறது.