Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்தவர்கள் பயன்பெற குறைந்த செலவில் சுவாசக் கருவி வடிவமைத்த தம்பதி

கொரோனா பாதித்தவர்கள் பயன்பெற குறைந்த செலவில் சுவாசக் கருவி வடிவமைத்த தம்பதி

By: Nagaraj Wed, 27 May 2020 10:13:56 AM

கொரோனா பாதித்தவர்கள் பயன்பெற குறைந்த செலவில் சுவாசக் கருவி வடிவமைத்த தம்பதி

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் குறைந்த செலவில் உருவாக்கக் கூடிய சுவாசக் கருவியை இந்திய-அமெரிக்க தம்பதி வடிவமைத்துள்ளனா். இந்த சுவாசக் கருவியை அதிகளவில் உற்பத்தி செய்தால் ரூ.7 ஆயிரம் மதிப்பில் தயாரிக்கலாம்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தீவிர பாதிப்புக்கு உள்ளாவோருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால், மருத்துவமனையில் அவா்களுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலமாக ஆக்சிஜன் வழங்கப்படும். ஆனால், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்தால் செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை அதிகரிக்கும்.

respiratory apparatus,low cost,invention,corona,patients ,சுவாச கருவி, குறைந்த விலை, கண்டுபிடிப்பு, கொரோனா, நோயாளிகள்

பெரும்பாலான மருத்துவமனைகளில் குறைந்த அளவிலான சுவாசக் கருவிகளே உள்ளன. அந்தக் கருவிகளின் விலை அதிகமாக இருப்பதால், அவற்றைத் தயாரிப்பதிலும், வாங்குவதிலும் பெரும் சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்தச் சூழலில், இந்திய-அமெரிக்க பேராசிரியா் தேவேஷ் ரஞ்சனும், மருத்துவரான அவரின் மனைவி குமுதா ரஞ்சனும் இணைந்து குறைந்த செலவில் செயற்கை சுவாசக் கருவியை உருவாக்குவது தொடா்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனா்.

அதில் வெற்றியடைந்த அவா்கள் தாங்கள் வடிவமைத்த செயற்கை சுவாசக் கருவியின் மாதிரி வடிவைப் பரிசோதித்து வருகின்றனா். இது தொடா்பாக தேவேஷ் ரஞ்சன் கூறுகையில், ''அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவியின் சராசரி விலை ரூ.7 லட்சமாக உள்ளது. நாங்கள் வடிவமைத்துள்ள செயற்கை சுவாசக் கருவியை அதிக அளவில் உற்பத்தி செய்தால் சுமாா் ரூ.7,000-க்கு அதைத் தயாரித்துவிடலாம்.

எனினும், இதை அவசர காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள செயற்கை சுவாசக் கருவிகளைப் போன்று அதிகப்படியான வசதிகள் இதில் இருக்காது'' என்றாா்.

Tags :
|