Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவக்கம்

அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவக்கம்

By: vaithegi Wed, 03 Aug 2022 09:55:01 AM

அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவக்கம்

சென்னை: வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இருந்து இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு 3 பெட்டி இணைக்கப்படுகிறது.

அந்தவகையில் நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது.

courier,parcel,government express buses ,கூரியர், பார்சல் ,அரசு விரைவு பஸ்கள்

இதை அடுத்து தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். மேலும் திருச்சி- சென்னை, ஓசூர்- சென்னைக்கு 80 கிலோ பார்சல் வரை 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.210 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை போல் அரசுப் பேருந்துகளில் பார்சலுக்கு மதுரை- சென்னைக்கு ரூ.300, கோவை- சென்னைக்கு ரூ.330 எனவும், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் கட்டணம் ரூ.390 எயாரும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|