Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு ...நீதிமன்றம் தள்ளுபடி

நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு ...நீதிமன்றம் தள்ளுபடி

By: vaithegi Thu, 14 July 2022 5:57:42 PM

நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு  ...நீதிமன்றம் தள்ளுபடி

இந்தியா: இந்தியாவில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கு ஆரம்பத்தில் வயது வரம்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதால் பலரும் இந்தாண்டு நீட் தேர்வை எழுதவுள்ளனர். நீட் தேர்வில் மொத்தமாக 180 கேள்விகள் இடம்பெறும்.

discount,neet exam ,தள்ளுபடி,நீட் தேர்வு

அதன்படி விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் இடம்பெறும். இவற்றில் 45 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது. மேலும், 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் நன்றாக பயிற்சி பெற்றுள்ளனர்.

இச்சமயத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை, வெள்ளம் போன்றவற்றால் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதாவது, கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் சில மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியாமல் போவதற்கு மொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tags :