Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு அபராதம் விதித்த கோர்ட்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு அபராதம் விதித்த கோர்ட்

By: Monisha Wed, 16 Dec 2020 10:31:15 AM

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு அபராதம் விதித்த கோர்ட்

ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை தாலுகாவைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி(வயது 50). இவர் பட்டா பெயர் மாறுதலுக்காக நல்லாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பிக்க சென்றார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அரச்சாலகுமார்(36) பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவமூர்த்தி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன்பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சிவமூர்த்தி கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அவரிடம் ரூ.2 ஆயிரத்து 900 ரூபாயை லஞ்சமாக சிவமூர்த்தி கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அரச்சாலகுமாரை பிடித்து கைது செய்தனர்.

bond,bribe,complaint,judgment,fine ,பட்டா,லஞ்சம்,புகார்,தீர்ப்பு,அபராதம்

கைதான அரச்சாலகுமார் மீது ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கே.ஆர். ஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் அவர், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரச்சாலகுமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், அரச்சாலகுமார் அரசு ஊழியராக பணியாற்றி வருவதால், அவரை பணிநீக்கம் செய்வது தொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பரிந்துரை செய்ய ஆலோசித்துள்ளனர்.

Tags :
|
|