Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லூலூ மாலில் தொழுகை செய்த 6 நபருக்கும் பிணை வழங்கிய கோர்ட்

லூலூ மாலில் தொழுகை செய்த 6 நபருக்கும் பிணை வழங்கிய கோர்ட்

By: Nagaraj Sat, 30 July 2022 5:29:25 PM

லூலூ மாலில் தொழுகை செய்த 6 நபருக்கும் பிணை வழங்கிய கோர்ட்

உத்தரபிரதேசம்: பிணை வழங்கியது கோர்ட்... உத்திரப் பிரதேச மாநிலம் லக்னௌவிலுள்ள லூலூ மாலில் தொழுகை செய்த 6 நபருக்கும் தற்போது பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தினை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் லூலூ மால் லக்னௌவில் நிறுவப்பட்டுள்ளது. இதை ஜூலை 10ஆம் நாள் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.


மால் திறந்த சில நாட்களில் அங்கு சில நபர்கள் தொழுகை செய்யும் விடியோ வைரலானது. அதனைத் தொடர்ந்து இந்து மகாசபையை சேர்ந்த சிஷிர் சதுர்வேதி என்பவர் ஜூலை 15இல் வழக்கு தொடர்ந்தார். அதனால் அங்கு தொழுகை செய்த 6 முஸ்லீம் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

bond,order,issue,court,prayer ,பிணைப்பத்திரம், உத்தரவு, பிறப்பிப்பு, கோர்ட், தொழுகை

இதன் பின்னர் ஹிந்து சமாஜ் கட்சியினை சார்ந்த இரண்டு நபர்கள் லூலூ மாலில் ஹனுமான் பூசை செய்யவிருப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். எனவே, லூலூ நிர்வாகம், “எந்த ஒரு மத வழிபாடும் இந்த வளாகத்தில் அனுமதிக்கப்படாது” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 6 நபர்களுக்கும் ஏசிஜேஎம் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. ஒவ்வொரு நபரும் 20,000 ரூபாய் பிணைப்பத்திரம் வழங்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|