Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10ம் வகுப்பு குறித்த வழக்கில் பதில் அளிக்க தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

10ம் வகுப்பு குறித்த வழக்கில் பதில் அளிக்க தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By: Nagaraj Thu, 21 May 2020 1:05:25 PM

10ம் வகுப்பு குறித்த வழக்கில் பதில் அளிக்க தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று வெசன்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இளங்கோவன் என்பவா் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த பொதுத் தேர்வை நடத்தக்கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

10th class,tamil nadu,puducherry,notice,court,order ,10ம் வகுப்பு, தமிழகம், புதுச்சேரி, நோட்டீஸ், நீதிமன்றம், உத்தரவு

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முனுசாமி, இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னா் இந்தத் தேர்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10th class,tamil nadu,puducherry,notice,court,order ,10ம் வகுப்பு, தமிழகம், புதுச்சேரி, நோட்டீஸ், நீதிமன்றம், உத்தரவு

தேர்வு நடைபெற உள்ள 12 ஆயிரத்து 600 தோவு மையங்களிலும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொரோனா பரவாமல் இருக்க தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் தீவிரமாகப் பின்பற்றப்படும் என வாதிட்டாா்.

புதுச்சேரி மாநில அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஸ்டாலின் அபிமன்யு இதுதொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Tags :
|
|