கார் வாகன விபத்து வழக்கில் ஏப்.25ம் தேதி மீண்டும் ஆஜராக யாஷிகாவுக்கு கோர்ட் உத்தரவு
By: Nagaraj Mon, 27 Mar 2023 5:26:50 PM
சென்னை: கார் வாகன விபத்து வழக்கில் வரும் ஏப்.25ம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிடிவாரண்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது.
அதில், காரில் சென்ற யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு தொடர்பாக ஆஜராகாத யாஷிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று யாஷிகா நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த், வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Tags :
court |
order |
appeared |
warrant |