Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

By: Nagaraj Tue, 10 Jan 2023 09:11:55 AM

மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

சென்னை: தடை விதிப்பு... மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்த்த இருவர் பொதுநலவழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வுக்கு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தொழில் தகராறு சட்டத்தின்படி சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பின்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க கூடாது என்றும் சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 6 வாரத்திற்கு முன்பே அறிக்கை வெளியிடவில்லை.

prohibition order,agitation,electricity workers,instruction ,தடை உத்தரவு, போராட்டம், மின்வாரிய ஊழியர்கள், அறிவுறுத்தல்

இதனால் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார் .இது தொடர்பாக ஆஜரான கூடுதல் அரசு தரப்பு வழக்கறினர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆவின் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி மற்றும் கல்லூரியின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் எனவே போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அனைத்து வாதங்களையும் ஏற்று கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டதால் பொதுமக்கள் பாதிக்க படுவார்கள் என்பதால் போராட்டத்திற்கு சென்னை உயர்நிதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Tags :