Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதை மருந்து விவகாரத்தில் சர்வதேச அடையாள தடையை விலக்க நீதிமன்றம் மறுப்பு

போதை மருந்து விவகாரத்தில் சர்வதேச அடையாள தடையை விலக்க நீதிமன்றம் மறுப்பு

By: Nagaraj Fri, 18 Dec 2020 09:37:06 AM

போதை மருந்து விவகாரத்தில் சர்வதேச அடையாள தடையை விலக்க நீதிமன்றம் மறுப்பு

மறுப்பு தெரிவித்தது நீதிமன்றம்... போதை மருந்து சர்ச்சை காரணமாக, ரஷ்ய தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட சர்வதேச அடையாள தடையை விலக்குவதற்கு மறுத்துவிட்டது சுவிட்சர்லாந்து நீதிமன்றம்.

அதேசமயம், 4 ஆண்டுகள் தடைக் காலத்தை, 2 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். ரஷ்ய தடகள வீரர்-வீராங்கனைகள், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், அவர்கள் ரஷ்ய நாட்டுக் கொடியுடன் பங்கேற்க, 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

russia,court,denial,authorities,player-athletes ,ரஷ்யா, நீதிமன்றம், மறுப்பு, அதிகாரிகள், வீரர்- வீராங்கனைகள்

மேலும், அவர்கள் தங்கள் நாட்டு தேசிய கீதத்தையும் பயன்படுத்த முடியாது. தற்போது, அந்த தடையானது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்தாலும், அதன் காலம் 2022ம் ஆண்டு டிசம்பர் 16. எனவே, அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, 2022ம் ஆண்டின் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022ம் ஆண்டின் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து ஆகியவற்றில் ரஷ்ய வீரர் - வீராங்கனைகள் தங்களது அடையாளத்துடன் கலந்துகொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரஷ்யா நாட்டின் அதிகாரிகளும் கலந்துகொள்ள முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.

Tags :
|
|
|