Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் - தலைமை நீதிபதி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் - தலைமை நீதிபதி அறிவிப்பு

By: Monisha Wed, 03 June 2020 11:42:32 AM

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் - தலைமை நீதிபதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 50% ஊழியர்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் என இருந்த பணி நாட்கள் 6 நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu,puducherry,court,working days,saturday ,தமிழ்நாடு,புதுச்சேரி,நீதிமன்றம்,பணி நாட்கள்,சனிக்கிழமை

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி விசாரணையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|