Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவேக்சின் மருந்தை நோயாளிகளுக்கு செலுத்தும் பரிசோதனைகளை விரைவில் செய்து முடிக்க உத்தரவு

கோவேக்சின் மருந்தை நோயாளிகளுக்கு செலுத்தும் பரிசோதனைகளை விரைவில் செய்து முடிக்க உத்தரவு

By: Karunakaran Fri, 03 July 2020 2:07:02 PM

கோவேக்சின் மருந்தை நோயாளிகளுக்கு செலுத்தும் பரிசோதனைகளை விரைவில் செய்து முடிக்க  உத்தரவு

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியிருப்பினும், இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

covexin,bharat biotech,india,corona virus ,கோவெக்சின், பாரத் பயோடெக், இந்தியா, கொரோனா வைரஸ்

தற்போது இதன் அடுத்தகட்ட பரிசோதனையான மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதை விரைவில் முடித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. பாரத் பயோடெக் மற்றும் பரிசோதனை நடைபெறும் மருத்துவக் கல்லூரிகளின் முதன்மை ஆய்வாளர்களுக்கு ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் விளக்கமளிக்கையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிவுகள் கிடைக்கக்கூடிய வகையில் சோதனைகளை விரைவுபடுத்துவதே இந்த கடிதத்தின் நோக்கம். ஆனால் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு அதிக காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

Tags :
|