Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறை கைதிகள் தயாரிப்பில் உருவாகும் பசு சாண விளக்குகள்

சிறை கைதிகள் தயாரிப்பில் உருவாகும் பசு சாண விளக்குகள்

By: Nagaraj Fri, 21 Oct 2022 4:42:24 PM

சிறை கைதிகள் தயாரிப்பில் உருவாகும் பசு சாண விளக்குகள்

ஆக்ரா: பசு சாணத்தில் விளக்குகள்... உத்தரபிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகள் பசுவின் சாணத்தில் ஒரு லட்சம் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இத்தகவல் தற்போது செம வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மாவட்ட சிறை வளாகத்தில் கோசாலா அமைந்துள்ளது. சிறை கைதிகள் இங்கு சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து விளக்குகளை தயாரிக்கின்றனர்.

jail inmates,one lakh,dung,cows,lamp,ready ,சிறை கைதிகள், ஒரு லட்சம், சாணத்தில், மாடுகள், விளக்கு, தயார்

தீபாவளிக்கு ஒரு லட்சம் விளக்குகளை தயார் செய்துள்ளனர். 12 கைதிகள் சேர்ந்து விளக்குகள் தயாரிக்கிறார்கள். இது குறித்து கண்காணிப்பாளர் சலோனியா கூறுகையில்,”25 ஆயிரம் விளக்குகளை பறிமுதல் செய்ய சிறை கைதிகள் தயாராக உள்ளனர்.ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.25 கூலி வழங்கப்படுகிறது.இந்த விளக்குகள் ஒவ்வொன்றும் 40 பைசாவிற்கு விற்கப்படுகிறது.

ஏற்கனவே, 25 ஆயிரம் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் விளக்குகள் செய்ய தயாராக உள்ளனர். அன்வல்கெடாவில் உள்ள வேதமாதா ஸ்ரீ காயத்ரி அறக்கட்டளை 51 ஆயிரம் விளக்குகள் கேட்டுள்ளது என்றார்.

Tags :
|
|
|