Advertisement

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

By: vaithegi Wed, 01 Nov 2023 3:01:48 PM

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் வருகிற நவ.12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தற்போது இருந்தே பட்டாசுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதிகளவில் பட்டாசு உற்பத்தி செய்யும் சிவகாசியில் சுற்றுசூழலுக்கு மாசினை ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டாலும் விலை அதிகம் என்பதால் பலரும் அதை வாங்க சற்று யோசிக்கின்றனர். இதனால், அதிகளவில் மாசினை ஏற்படுத்தும் சீன வெடிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதனால், ஒரே நாளில் அதிகளவில் காற்று மாசுபடுகிறது.எனவே இதனை, தவிர்ப்பதற்காக சுற்றுசூழலுக்கு உகந்த வெடிகளை வாங்கி பய்னபடுத்தும்படி சுற்றுசூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

fireworks,diwali ,பட்டாசு ,தீபாவளி

இந்த நிலையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுற்றுசூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், தீவிபத்துகளால் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags :