Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிடில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்; போலீசார் எச்சரிக்கை

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிடில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்; போலீசார் எச்சரிக்கை

By: Nagaraj Mon, 29 June 2020 12:03:18 PM

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிடில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்; போலீசார் எச்சரிக்கை

முகக்கவசம் இல்லாவிடில் கிரிமினல் வழக்கு... பெங்களூருவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரை முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்டவையே கொரோனா பரவலைத் தடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் உலகம் முழுவதும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர்.

action,corona prevention,rules,business institutions ,நடவடிக்கை, கொரோனா தடுப்பு, விதிகள், வணிக நிறுவனங்கள்

ஆனால் கொரோனோ தொற்று குறித்த சரியான புரிதல் இல்லாமல் பலர் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் சுற்றித் திரிகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக யாராவது எதிர்வாதம் செய்தால் உடனடியாக 100 என்ற எண்ணுக்கு அழைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

action,corona prevention,rules,business institutions ,நடவடிக்கை, கொரோனா தடுப்பு, விதிகள், வணிக நிறுவனங்கள்

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், 'இணை மற்றும் துணை ஆணையர்கள் களத்தில் உள்ளனர். மக்களை அவர்கள் தீவிரமாக கண்காணிப்பார்கள்.

முக்கிய பிரமுகர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் என்ற சலுகைகள் கிடையாது. யாராக இருந்தாலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.


Tags :
|
|