Advertisement

6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு

By: vaithegi Fri, 22 Sept 2023 3:11:20 PM

6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு

சென்னை: இயற்கை இடிபாடுகளால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.560கோடி இழப்பீடு வழங்க இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு ..தமிழகத்தில் இயற்கை இடிபாடுகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தமிழக அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

அதாவது, தமிழகம் முழுவதும் 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்.டி.எப்.சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

crop,farmer,compensation ,பயிர் ,விவசாயி,இழப்பீடு

இவ்வாறு பயிர் காப்பீடு திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு பயிர் சேதமாகும்பட்சத்தில் பரப்பளவிற்கு தகுந்தவாறு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 2022-2023-ஆம் ஆண்டு 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டதில் 33% க்கும் மேலாக பருவமழையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், வறட்சி, பருவமழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தகுதி உள்ள 6 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|