Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதிய அளவு தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு ரூ. 4000 இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

போதிய அளவு தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு ரூ. 4000 இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

By: vaithegi Sun, 15 Oct 2023 3:16:23 PM

போதிய அளவு தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு ரூ. 4000 இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி சரிந்துள்ளது. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை ...

காவிரி அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். மறுபுறம் குறுவை சாகுபடியும் சரிந்துள்ளது.

ramdas,demand,water ,ராமதாஸ், கோரிக்கை,தண்ணீர்

இதனை அடுத்து சுமார் 1,96,215 ஏக்கர் பரப்பளவில் நடப்பு ஆண்டு குறுவை நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் பருவமழையும் இல்லாமல் காவிரி அணையிலிருந்து தண்ணீரும் கிடைக்காமல் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒரு ஏக்கருக்கு 40,000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|
|