Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜவுளிக்கடையில் காய்கறி அறிவிப்பால் கூடிய மக்கள் கூட்டம்

ஜவுளிக்கடையில் காய்கறி அறிவிப்பால் கூடிய மக்கள் கூட்டம்

By: Nagaraj Wed, 09 Dec 2020 7:45:57 PM

ஜவுளிக்கடையில் காய்கறி அறிவிப்பால் கூடிய மக்கள் கூட்டம்

ஜவுளி கடையின் அறிவிப்பால் அதிகளவில் மக்கள் கூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால், பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, சந்தைகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், தான் நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது, ஒரு கிலோ காய்கறி ரூ.10க்கு கிடைக்கும் என நெல்லை போத்தீஸ் கடையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

corona,health,supremacy,vegetables ,கொரோனா, சுகாதாரத்துறை, அதிப்தியை, காய்கறிகளை

அதனால் இன்று காலை கடையை திறப்பதற்கு முன்னரே, பொதுமக்கள் கூட்டம் கடை வாசலில் அலைமோதியது. சிலர் மாஸ்க் அணிந்தும், சிலர் மாஸ்க் அணியாமலும் காய்கறிகளை வாங்க திரண்டனர்.

கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், காய்கறி வாங்க மக்கள் கூட்டம் குவிந்தது அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

Tags :
|
|