Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சையில் அலைமோதும் மக்கள் கூட்டம்... நெரிசலை சீரமைக்கும் போக்குவரத்து போலீசாருக்கு குவியும் பாராட்டு

தஞ்சையில் அலைமோதும் மக்கள் கூட்டம்... நெரிசலை சீரமைக்கும் போக்குவரத்து போலீசாருக்கு குவியும் பாராட்டு

By: Nagaraj Sun, 23 Oct 2022 9:34:53 PM

தஞ்சையில் அலைமோதும் மக்கள் கூட்டம்... நெரிசலை சீரமைக்கும் போக்குவரத்து போலீசாருக்கு குவியும் பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சையில் தீபாவளியை ஒட்டி ஜவுளிகள், ஸ்வீட், பட்டாசு மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக கடந்த 10 நாட்களாக இரவு, பகல் பாராது போக்குவரத்து பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சை காந்திஜி சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. ஜவுளி எடுக்க, மளிகை பொருட்கள் வாங்க, பட்டாசு வாங்குவதற்கு என்று தஞ்சை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் கூட்டம் தஞ்சாவூருக்கு அதிகளவில் வந்தபடி உள்ளனர்.


கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழராஜவீதி, அண்ணா சிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இப்பகுதிகளில் சாலையோரத்தில் தரைக்கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன.

appreciation,public,traffic,surveillance,crowd ,பாராட்டு, பொதுமக்கள், போக்குவரத்து, கண்காணிப்பு, மக்கள் கூட்டம்

இதனால் காந்திஜி சாலையை கடக்க சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று காலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக தஞ்சை போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் 20க்கும் அதிகமான போக்குவரத்து பிரிவு போலீசார் கடந்த 10 நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பணியாற்றி வருகின்றனர்.

மேலும் தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை காந்திஜி சாலையில் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதே போல பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் தெற்கு அலங்கம், காவேரி சிறப்பங்காடி, சோழன்சிலை வழியாக திருப்பி விடப்பட்டன. இப்படி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து காவல்பிரிவு போலீசார் பணியாற்றினர்.

இன்று காலையிலிருந்து மக்கள் கூட்டம் அதிகளவில் வந்தது. பழைய பேருந்து நிலையம் பகுதியில்தான் ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ளதால் மக்கள் கூட்டம் இது அதிகளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் கூட்டத்தில் சிக்கி தவிக்காத வகையில் போக்குவரத்து காவல்பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் இர்வின் பாலம், அண்ணாசிலை, பழைய பேருந்து நிலையம், பெரிய கோவில் பகுதி என்று தொடர்ந்து மாறி, மாறி பணி மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு கண்காணித்தார். இவ்வாறு கடந்த 10 நாட்களாக ஓய்வின்றி போக்குவரத்து பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் பணியாற்றியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags :
|