Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘பிட்னெஸ் சேலஞ்ச்’ எனப்படும் இலவச உடற்பயிற்சிகளில் பங்கேற்க வருமாறு பட்டத்து இளவரசர் அழைப்பு

‘பிட்னெஸ் சேலஞ்ச்’ எனப்படும் இலவச உடற்பயிற்சிகளில் பங்கேற்க வருமாறு பட்டத்து இளவரசர் அழைப்பு

By: Karunakaran Wed, 21 Oct 2020 12:55:11 PM

‘பிட்னெஸ் சேலஞ்ச்’ எனப்படும் இலவச உடற்பயிற்சிகளில் பங்கேற்க வருமாறு பட்டத்து இளவரசர் அழைப்பு

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது கூறுகையில், துபாயில் வசிக்கும் அனைவரும் அலுவலக பணி நிமித்தமாக அல்லது வர்த்தக நிமித்தமாக தினசரி தொடர்ந்து பணிபுரிந்து கொண்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதில்லை. அதிலும் சிலர் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறினார்.

இதனை கவனத்தில் கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ‘பிட்னெஸ் சேலஞ்ச்’ எனப்படும் உடற்திறனை மேம்படுத்தும் இலவச உடற்பயிற்சிகள் 30 நாட்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர் என பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.

crown prince,free exercise,fitness challenge,dubai ,பட்டத்து இளவரசர், இலவச உடற்பயிற்சி, உடற்தகுதி சவால், துபாய்

மேலும் அவர், இந்த ஆண்டும் ‘பிட்னெஸ் சேலஞ்ச்’ இலவச உடற்பயிற்சிகள், நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் வருகிற 30-ந் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி வரை துபாய் நகரில் பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் dubaifitnesschallenge.com என்ற இணையதள முகவரி அல்லது ‘பிட்னெஸ் சேலஞ்ச் செயலி’ ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறினார்.

துபாயில் உள்ள சமூக நல அமைப்புகள், தனிநபர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த ‘பிட்னெஸ் சேலஞ்ச்’ உடற்பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது தெரிவித்தார்.

Tags :