Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம்

கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம்

By: Karunakaran Sun, 05 July 2020 10:04:04 AM

கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பிளாஸ்மா தானம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. கொரோனா காலத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் கொரோனா பாதித்து வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது.

அதன்படி, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் தானம் செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் பலர் குணமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

crpf player,corona virus,plasma,donate ,சிஆர்பிஎஃப் பிளேயர், கொரோனா வைரஸ், பிளாஸ்மா,  தானம்

இதுகுறித்து சிஆர்பிஎஃப் வீரர்கள் கூறுகையில், நாங்கள் பிளாஸ்மா தானம் செய்வதால் பெருமை அடைகிறோம். இது நாட்டிற்கான மற்றொரு சேவை என்று தெரிவித்துள்ளனர். நாட்டிற்காக போராடி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்து நாட்டிற்கு சேவை செய்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெல்லியில் முதன் முறையாக கொரோனா பிளாஸ்மா சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. மஹாரஷ்டிராவிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.


Tags :
|