Advertisement

மீண்டும் ஊரடங்கா... திட்டவட்டமாக பதில் அளித்த அமைச்சர்

By: Nagaraj Sun, 10 July 2022 8:55:17 PM

மீண்டும் ஊரடங்கா... திட்டவட்டமாக பதில் அளித்த அமைச்சர்

மதுரை: அமைச்சர் தெரிவித்த தகவல்... தமிழகத்தில் கொரோனா பரவலை ஒட்டி மீண்டும் ஊரடங்கு (லாக் டவுன்) அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதா என்பதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 10) பதிலளித்துள்ளார்.

தமிழநாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று மதுரை கொட்டாம்பட்டியில் நடைபெற்ற மருத்துவ முகாமைப் பார்வையிட்டார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை தடுப்பூசி, 94.68 சதவீதம் பேருக்கும் 2வது தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டிருக்கிறது. இன்று (ஜூலை 10) மதியம் 1.30 மணிவரை தமிழகத்தில் 7,57,543 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. மதுரையைப் பொறுத்தவரை 38,723 பேருக்கு ஊசிகள் போடப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87.07 சதவிகிதமும், 2வது தவணை 57.09 சதவீதம் பேருக்கும் போடப்பட்டிருக்கிறது. ஆக, தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை என்பது 40 சதவீதம் அளவுக்கு வந்திருக்கிறது.

action,health,minister,information,police,medical workplace ,நடவடிக்கை, சுகாதாரத்துறை, அமைச்சர், தகவல், காவல்துறை, மருத்துவ பணியிடம்

குறிப்பாக மதுரையைப் பொறுத்தவரை 65,253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. மதுரையைப் பொறுத்தவரை 2,62,910 பேருக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஒரு லட்சம் பேருக்கு இலக்கு என்ற வகையில் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம் தடுப்பூசி முகாம்களைச் அமைத்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 76,89,040 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நம் முதல்வர் டெல்லியில் பார்வையிட்டு வந்த நவீன மருத்துவமனைகளைப்போல, தமிழகத்திலும் விரைவில் மாநகராட்சிப் பகுதிகளில் திறக்கப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. 25 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களும் நகர்ப்புற இடங்களில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும் விரைவில் வர இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலையைப் பொறுத்தவரை 50 மாணவர்களுடைய சேர்க்கை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன் மருத்துவக் கட்டமைப்பு குறித்து விரைவில் தகவல் வெளியிடப்பட இருக்கிறது. இன்னும் 4-5 மாதங்களில் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கும். கடந்த ஆட்சியில் அதன் சுற்றுப்புறச் சுவர் மட்டுமே கட்டப்பட்டது” என்றார்.

மேலும் அவர், “ கடந்த 3-4 மாதங்களில் கொரோனாவால் உயிரிழப்பு என்பது தமிழகத்தில் இல்லாமல் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது 2,500ல் தொடங்கி 2,700 வரை இருந்தாலும் உயிர் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக இல்லாமல் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு, சென்னையில் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டது.

அதுகூட, இணை நோயினால் ஏற்பட்டிருக்கிறது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையில் காலியாக இருக்கும் 4,308 பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியல் எம்.ஆர்.பியிடம் வழங்கப்பட்டிருக்கிறது. எம்.ஆர்.பி. நிர்வாகம் அவர்களிடம் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. 1,021 மருத்துவர்கள் உள்பட 4,308 மருத்துவப் பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

Tags :
|
|
|