Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் ஊரடங்கு அமல்

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் ஊரடங்கு அமல்

By: vaithegi Thu, 14 July 2022 2:36:44 PM

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் ஊரடங்கு அமல்

கொழும்பு: இலங்கை கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து கொண்டு வருகிறது. அதனால் அன்றாடம் உண்பதற்கு தேவையான காய்கறிகளை கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் மிக கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என இலங்கை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே சென்றதனால் பிரதமர் இலங்கை மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

மேலும், இலங்கை அதிபரான கோத்தபாய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். மாலத்தீவிலும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

curfew,colombo ,ஊரடங்கு ,கொழும்பு

அதன் பின், தற்காலிக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும், கூட நாளுக்கு நாள் இலங்கையில் போராட்டம் வலுவாகி கொண்டே செல்கிறது.
மேலும், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் போராட்டம் மிக தீவிரமடைந்து கொண்டே செல்வதால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து கொண்டு வருகிறது.

இதனால், இலங்கை தலைநகர் கொழும்புவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் கொழும்புவில் போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு என இலங்கை அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags :
|