Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டி வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டி வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By: vaithegi Wed, 15 June 2022 6:33:00 PM

சென்னையில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டி வருவதால்  மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகம்: தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவிறுத்தியுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 171 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் செங்கல்பட்டில் 60 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மிக கூடுதல் கவனம் செலுத்தும்படி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

curfew,corona,vaccine ,ஊரடங்கு,கொரோனா ,தடுப்பூசி

மேலும், தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளில் தானாகவே கொரோனா பரவல் குறையத் தொடங்கும்.

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதனால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|