Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவதாக கருத்துக்கணிப்பு

ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவதாக கருத்துக்கணிப்பு

By: Karunakaran Sun, 05 July 2020 3:26:05 PM

ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவதாக கருத்துக்கணிப்பு

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இவ்வாறு திரும்பிய இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை குறித்து ‘ஹியூமன் லிபர்ட்டி நெட்வொர்க்’ என்ற தொண்டு அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு 30 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ள உத்தரபிரதேசத்திலும், 30 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ள பீகாரிலும் நடத்தப்பட்டது. இதன் முடிவில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகள் அம்பலமாகியுள்ளன.

curfew,poll workers,hometown,effects ,ஊரடங்கு உத்தரவு, கருத்துக்கணிப்பு, தொழிலாளர்கள், சொந்த ஊர்

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது கூட சவாலாக அமைந்துள்ளது. கடன் கொத்தடிமைதனத்தால் ஆட்கடத்தல் என்னும் சவாலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில்மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் வேலை கோருவோர் அளவு 307 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெண்கள் தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் ஊட்டசத்து பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழான நன்மைகள் பலருக்கு கிடைக்கவில்லை. பீகாரில் வேலை அட்டை பெரும்பாலோருக்கு இல்லை போன்றவை இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Tags :
|