Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு

குமரியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு

By: Monisha Fri, 31 July 2020 4:21:59 PM

குமரியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை தொடரும் என்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு அறிவிப்பின்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆகஸ்டு 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை குமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஆகஸ்டு மாதத்தில் 2-ந் தேதி, 9-ந் தேதி, 16-ந் தேதி, 23-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி குமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். உரிய அரசு அறிவிப்பின்படி குமரி மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து ஆகஸ்டு 31-ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

kanyakumari district,curfew,restrictions,collector,shops ,கன்னியாகுமரி மாவட்டம்,ஊரடங்கு,கட்டுப்பாடுகள்,கலெக்டர்,கடைகள்

மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் (மருந்து கடைகள் தவிர) வழக்கம் போல காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பொதுமக்களும், வணிகர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உணவகங்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தவும், இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|