Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கை நீக்க கூடாது; மருத்துவக்குழுவினர் கருத்து

தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கை நீக்க கூடாது; மருத்துவக்குழுவினர் கருத்து

By: Nagaraj Sat, 30 May 2020 8:00:48 PM

தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கை நீக்க கூடாது; மருத்துவக்குழுவினர் கருத்து

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தளர்வுகளை அறிவிக்கலாம். மொத்தமாக அறிவிக்க முடியாது என்று கருத்துக்களை முன்வைத்துள்ளோம் என மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் இன்று மருத்துவக் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனரும் மூத்த விஞ்ஞானியான பிரதீப் கவுர் கூறுகையில், "கோவிட் 19 வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் அறிய முடியவில்லை. ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

corona,curfew,medical group,cm,consulting ,
கொரோனா, ஊரடங்கு, மருத்துவக்குழுவினர், முதல்வர், ஆலோசனை

மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் நகரங்களில் அதிகமான பாதிப்பு உள்ளது. சென்னையின் பக்கத்து மாவட்டங்கள் தவிர இதர பகுதிகளில் பாதிப்பு குறைவாக உள்ளது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே மாஸ்க் அவசியம் அணிய வேண்டும்.பல நாடுகளில் 99% மாஸ்க் அணிவதன் மூலமே பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாடு தொடர வேண்டும் என்று முதல்வரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தளர்வுகளை அறிவிக்கலாம்; மொத்தமாக அறிவிக்க முடியாது என்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளோம். பேருந்து மற்றும் ரயில் இயக்கம், கோயில், மண்டபங்கள் திறந்தால் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Tags :
|
|
|