Advertisement

தற்போது எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் 7,255 பேர் பாதிப்பு

By: vaithegi Wed, 22 Mar 2023 1:50:58 PM

தற்போது எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் 7,255 பேர் பாதிப்பு

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் கொரோனாவின் எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கிறது

இதையடுத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 76 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும், பல நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தீவிரக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

chennai,fever,affected ,சென்னை , காய்ச்சல்,பாதிப்பு

மேலும், தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே 23,833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அதில், பரிசோதனை செய்யப்பட்ட 10.47 லட்சம் பேரில் 7,255 பேருக்கு எச்3என்2 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து காய்ச்சல் உள்ளவர்கள் அனைவரும் வீட்டிலேயே 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் எந்த வித பதட்டப்பட தேவையில்லை என்றும், ஆக்சிஜன், மருந்துகள் என அனைத்து வசதிகளும் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Tags :
|