Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை தற்போது மின்வாரியம் நிறுத்தி வைப்பு

மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை தற்போது மின்வாரியம் நிறுத்தி வைப்பு

By: vaithegi Wed, 21 June 2023 10:38:25 AM

மின் கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை தற்போது மின்வாரியம் நிறுத்தி வைப்பு

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் பயன்பாட்டாளர்களிடமிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெபாசிட் தொகையானது வசூலிக்கப்படும்.இவ்வாறு வசூலிக்கப்படும் டெபாசிட் தொகையை விட அதிக அளவு மின்சாரத்தை பயனாளர்கள் பயன்படுத்தும் போது, அடுத்த முறை டெபாசிட் தொகையானது கூடுதலாக வசூலிக்கப்படும்.

இதையடுத்து இந்த கூடுதல் டெபாசிட் தொகை பற்றி அஞ்சல் வாயிலாகவோ, பதிவு செய்யப்பட்ட மின் பயன்பாட்டாளரின் செல்போன் எண்ணுக்கோ மின்வாரியம் தகவல் தெரிவிக்கும். இந்த டெபாசிட் தொகையானது தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது மின் கட்டணத்துடன் இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவதால் மின் பயன்பாட்டாளர்கள் தற்போது பெரும் குழப்பம் அடைந்து கொண்டு வருகின்றனர்.

electricity board,deposit amount ,மின்வாரியம் ,டெபாசிட் தொகை

ஏன் என்றால் தற்போது கோடை காலம் என்பதால் நுகர்வோர்கள் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் டெபாசிட் தொகையோடு இந்த மின் கட்டணமும் சேர்ந்து அதிக கட்டணம் செலுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இதற்கு மின் நுகர்வோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துவுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம், முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் , புதிய நடவடிக்கையை மேற்கொண்டுவுள்ளது.

அதாவது தற்போது கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்சார வாரியம் நிறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே நுகர்வோரிடம் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால், அத்தொகையானது அடுத்து வரும் மின் கட்டணத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகிவுள்ளன.

Tags :