Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி... ஆன்லைனில் மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கியது ரிலையன்ஸ்

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி... ஆன்லைனில் மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கியது ரிலையன்ஸ்

By: Nagaraj Mon, 25 May 2020 12:02:13 PM

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி... ஆன்லைனில் மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கியது ரிலையன்ஸ்

ஆன்லைன் மூலமாக மளிகைப் பொருட்கள் விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கி உள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஜியோமார்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் தன் விற்பனையை துவங்கி உள்ளது.

facebook,silver lake,vista,investment,groceries ,பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, முதலீடு, மளிகைப் பொருட்கள்

இதற்கு முன்னோட்டமாக மும்பையின் சில பகுதிகளில் கடந்த மாதம் முதலே பொருட்கள் வழங்கும் சேவையை துவங்கியது. முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளது.

ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா , ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|