Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவிஜில் செயலியில் கன்னட மொழி இல்லை; கர்நாடக மக்கள் அதிர்ச்சி

சிவிஜில் செயலியில் கன்னட மொழி இல்லை; கர்நாடக மக்கள் அதிர்ச்சி

By: Nagaraj Sun, 09 Apr 2023 4:31:49 PM

சிவிஜில் செயலியில் கன்னட மொழி இல்லை; கர்நாடக மக்கள் அதிர்ச்சி

கர்நாடகா: சிவிஜில் செயலியில் கன்னட மொழி இல்லை... கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க, ‘சிவிஜில்’ என்ற மொபைல் செயலியை, இந்திய தேர்தல் கமிஷன் உருவாக்கியுள்ளது.

இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, வீடியோ அல்லது போட்டோ பதிவு செய்து, தேர்தல் நடத்தை விதிமீறல்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வழங்குவது தொடர்பான முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தச் செயலில் கன்னட மொழி இல்லை.

app,c-vigil,kannada language,no,people,shock, ,அதிர்ச்சி, இல்லை, கன்னட மொழி, சி-விஜில், செயலி, மக்கள்

இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகள் மட்டுமே உள்ளன. அந்த மொழி மக்கள் தங்கள் மொழியை தேர்வு செய்து புகார்களை பதிவு செய்யலாம்.

ஆனால் அதில் கன்னட மொழி இடம்பெறவில்லை. இதனால் கர்நாடக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் நடந்தாலும் கன்னடத்தில் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னட மொழி இல்லாத நிலையில் சாமானியர்கள் எப்படி தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags :
|
|
|
|