மருத்துவமனைகளில் சைபர் கிரைம் தாக்குதல்... அமெரிக்காவில் சம்பவம்
By: Nagaraj Sun, 10 Sept 2023 11:54:33 PM
அமெரிக்கா: அமெரிக்க மருத்துவமனைகளில் சைபர்கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கணினிகளில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது.
900க்கும் மேற்பட்ட கணினிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனைகளில் சர்வர்கள் முடக்கப்பட்டன.
மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனால் அங்கு சுகாதாரப்பணிகள் பெருமளவில் முடங்கியதால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.