Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3500 நிதி மோசடிகள் தினமும் பெறப்படுகிறது என சைபர் கிரைம் போர்டல் அறிவிப்பு

3500 நிதி மோசடிகள் தினமும் பெறப்படுகிறது என சைபர் கிரைம் போர்டல் அறிவிப்பு

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:55:07 AM

3500 நிதி மோசடிகள் தினமும் பெறப்படுகிறது என சைபர் கிரைம் போர்டல் அறிவிப்பு

புதுடெல்லி: சைபர் க்ரைம் அதிகரிப்பு... மத்திய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தினமும் 3,500 நிதி மோசடி புகார்கள் பெறப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்.எஸ்.நபின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் ராஜேஷ் பந்த் கூறுகையில், ‘ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

financial fraud,increase,online, ,அதிகரிப்பு, ஆன்லைன், நிதி மோசடி

மத்திய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாகின்றன.

நாளுக்கு நாள், ஆன்லைனில் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள் மற்றும் விதவைகள்.

சைபர் கிரைம் புகார்கள் குற்றமாக்கப்பட வேண்டுமா அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா அல்லது சைபர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் தொடர்கிறது, தகவல் தொழில்நுட்பச் சட்டம் – 2000ஐத் திருத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன,” என்றார்

Tags :
|