Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்

உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்

By: Nagaraj Sat, 25 Feb 2023 6:46:50 PM

உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்

கன்னியாகுமரி: உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி சைக்கிள் பயணம்... மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்தவர் ப்ரீத்தி மாஸ்க் (46). உடல் உறுப்புகளை தானம் செய்ய வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

அதன்படி கடந்த 12ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லால்சௌக் பகுதியில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரியை அடைந்தார்.

awareness,cycling journey,organ-donation , உடல் உறுப்பு தானம், சைக்கிள் பயணம், விழிப்புணர்வு

அவர் மொத்தம் 3 ஆயிரத்து 676 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்கள் 22 மணி 21 நிமிடங்களில் கடந்து நேற்று கன்னியாகுமரியை அடைந்தார். தினமும் 19 மணி நேரம் சைக்கிள் ஓட்டியுள்ளார். தனது சாதனை குறித்து ப்ரீத்தி கூறுகையில், “உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

நான் கடந்து வந்த பாதையில் பலத்த காற்று, பனி மற்றும் வெப்ப தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இருப்பினும், மக்கள் எனது கோரிக்கைக்கு பெரும் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் என்றார்.

Tags :