Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிபோஜாய் புயல் வலுவிழந்தாலும் மழை நீடிக்கும் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

பிபோஜாய் புயல் வலுவிழந்தாலும் மழை நீடிக்கும் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Fri, 16 June 2023 10:10:11 AM

பிபோஜாய் புயல்  வலுவிழந்தாலும் மழை நீடிக்கும் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா: இன்றும் மழை நீடிக்கும் .... கடந்த 14.06.2023 வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் "பிப்பர்ஜாய், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்தில் இருந்து (குஜராத்) மேற்கு- தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு- வடமேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது.

இதையடுத்து இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் நேற்று மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.

meteorological centre,bibojoy cyclone ,வானிலை ஆய்வு மையம்,பிபோஜாய் புயல்

ஆனால் அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும். என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அரபிக் கடலில் உருவான பிபோஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்ட்ரா - குச் மாவட்டங்களுக்கு இடையே நேற்று நள்ளிரவில் கரைய கடந்தது . இரவு முழுவதும் பெய்த கனமழையால் 524 கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

மேலும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும், 22 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. எனினும் புயல் இன்று காலை வலுவிழந்தாலும் மழை நீடிக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

Tags :