Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னார் வளைகுடாவில் சூறாவளி காற்று .. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது

மன்னார் வளைகுடாவில் சூறாவளி காற்று .. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது

By: vaithegi Thu, 15 June 2023 2:22:56 PM

மன்னார் வளைகுடாவில் சூறாவளி காற்று ..   அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது

இந்தியா: தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்பட்ட வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு கடந்த ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரைக்கும் பின்பற்றப்பட்டது.

இந்நிலையில், மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் 2 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வரத்து மிகவும் குறைந்து இருந்ததால் குறைவான விலை மீன்கள் கூட மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தனர்.

fishermen,fishing ban period ,மீனவர்கள் ,மீன்பிடித் தடைக்காலம்

இதனால், அதிக அளவில் சிக்கன் மற்றும் மட்டன் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில், திடீரென சிக்கன் விலையும் கிலோ ரூபாய் 300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு இடையே, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதனால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், மீன்வளத்துறை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை என அறிவித்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகும் கூட மீன் பிடிக்க செல்ல முடிவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிலையை தங்களுக்கு சாதுவாக பயன்படுத்தி சிக்கன் மற்றும் மட்டன் அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags :