Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடற் பகுதியில் சூறாவளிக்காற்று... மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடற் பகுதியில் சூறாவளிக்காற்று... மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

By: Nagaraj Mon, 13 Nov 2023 9:11:25 PM

கடற் பகுதியில் சூறாவளிக்காற்று... மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கு எச்சரிக்கை... வானிலை மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையில் தமிழக கடலோரப்பகுதிகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்: இன்று அந்தமான் கடல் பகுதிகளில் உறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

fishermen,cyclone,warning,andaman,coastal ,மீனவர்கள் ,சூறாவளிக்காற்று, எச்சரிக்கை, அந்தமான், கடற்பகுதி

நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை வட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனை அடுத்து வருகிற 15.11.20822: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை வட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 16.11.2003: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் அதை ஓட்டிய மத்தியகிழக்கு-தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கபடுகின்றனர்.

Tags :