Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடமேற்கு வங்கக் கடலில் இன்று உருவானது 'மிதிலி' புயல் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

வடமேற்கு வங்கக் கடலில் இன்று உருவானது 'மிதிலி' புயல் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Fri, 17 Nov 2023 10:11:06 AM

வடமேற்கு வங்கக் கடலில் இன்று உருவானது 'மிதிலி' புயல் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: உருவானது 'மிதிலி' புயல் .... கடந்த 15-ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 320 கிலோ மீட்டர் தென்-தென்கிழக்கே,

டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 460 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கே நிலை கொண்டு உள்ளது.

meteorological centre,mithili,north west bay of bengal ,வானிலை ஆய்வு மையம்,மிதிலி,வடமேற்கு வங்கக் கடல்


இதையடுத்து இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, நாளை அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா -கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு மிதிலி ( MIDHILI) என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் மிதிலி புயல், வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :