Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக் கடலில் நிலைகொண்ட 'மோக்கா' புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

வங்கக் கடலில் நிலைகொண்ட 'மோக்கா' புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

By: vaithegi Fri, 12 May 2023 10:26:45 AM

வங்கக் கடலில் நிலைகொண்ட 'மோக்கா' புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் "மோக்கா" புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கே நிலைகொண்டு உ ள்ளது. இதையடுத்து இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

அதன் பின் இன்று காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு நாளை மாலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

mocha,storm,sea of ​​bengal ,மோக்கா,புயல்,வங்கக் கடல்

மேலும் அத்துடன் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 40 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயலின் வேகம் மணிக்கு 11 கி.மீ-ல் இருந்து 7 கி.மீ ஆக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்த அந்த புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது.நாளை மறுநாள் நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|