Advertisement

இன்று கரையை கடக்கிறது பிபார்ஜாய் புயல்

By: vaithegi Thu, 15 June 2023 11:46:08 AM

இன்று கரையை கடக்கிறது பிபார்ஜாய் புயல்

இந்தியா: வடகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபார்ஜாய்’ புயல், இன்று மாலை 4 முதல் இரவு 8 மணிக்குள் கரையைக் கடக்கிறது , மீட்புப் பணிக்காக ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலை ... வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் ‘பிபார்ஜாய்’ கடந்த 13ம் தேதி வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில், நிலை கொண்டு உள்ளது.

இதையடுத்து இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று மாலை, மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.

cyclone pibarjoy,arabian sea , பிபார்ஜாய் புயல்   ,அரபிக்கடல்


மேலும் அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.பிபார்ஜாய் புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானை நோக்கி தனது திசையை மாற்றியுள்ளது. இதனால், குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புயல் வலுவிழந்தாலும், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்திவுள்ளது. அதன்படி, மீட்புப் பணிக்காக ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Tags :